அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்து விட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்த கதை விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை என்று தெரிந்தும் அதில் சில மாற்றங்களை மட்டும் செய்ய சொல்லி அஜித் ஓகே சொல்லியுள்ளாராம். நடிக்க வந்த ஆரம்பத்தில் அஜித் நடிக்கவேண்டிய சில படங்கள் விஜய்யின் கைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதே போல விஜய் நடிக்கவேண்டிய காதல் கோட்டை திரைப்படமும் அஜித்துக்கு சென்றது. இடையில் இருவரும் தனித்தனி பாதைகளில் சென்ற நிலையில், இப்போது சுதா கொங்கரா விஜய்க்காக சொன்ன கதையை அஜித் டிக் அடித்திருப்பது அந்த கதையின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.