அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்து விட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது அடுத்த படத்துக்காக இரு தமிழ் இயக்குனர்களிடம் தன் வீட்டில் வைத்தே இயக்குனர் சுதா கொங்கராவிடம் கதை கேட்டு அதை ஓகே செய்துள்ளார் அஜித். இந்த கதை சுதா ஏற்கனவே விஜய்க்காக சொன்ன கதை என சொல்லப்படுகிறது. அதில் சிறிய மாற்றங்களை செய்து இப்போது அஜித்துக்கு சொல்லியுள்ளாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்போது தயாரிக்க உள்ளது.