இந்துக்களை இழிவுப்படுத்துகிறதா எம்பையர் சிரிஸ்? – ட்ரெண்டிங்கில் அன்இன்ஸ்டால் ஹாட்ஸ்டார்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:56 IST)
ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியாகியுள்ள தி எம்பையர் வெப் சிரிஸ் இந்துக்களை இழிவுப்படுத்துவதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முகலாய பேரரசின் வளர்ச்சி, போர்கள் மற்றும் வீழ்ச்சியை கொண்டு அலெக்ஸ் ரூதர்போர்டு என்பவர் எம்பையர் ஆப் தி முகல் என்ற புத்தக வரிசையை எழுதியிருந்தார், இந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட தி எம்பையர் என்ற வெப் சிரிஸின் முதல் சீசன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வெப் சிரிஸில் இந்து மதம் மற்றும் அரசர்களை விமர்சிப்பதாகவும், முகலாயர்களை தூக்கி பிடிக்கும் வகையில் உள்ளதாகவும் இந்து மத ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #UninstallHotstar என்ற ஹேஷ்டேகை ட்ரென்ட் செய்து ஹாஸ்டார் செயலியை மொபலிலிருந்து நீக்கியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்