யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

vinoth

வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:46 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்ற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்லார். அமெரிக்காவின் ப்ளோரிடாவில் பேசிய சிவராஜ் குமார் தான் நலமுடன் திரும்பி வருவேன் என்று நம்பிக்கையாகப் பேசியுள்ளார்.

அதில் “புற்றுநோய் என்றதும் என்னை சுற்றியுள்ளவர்களும் நானும் கொஞ்சம் பயந்துவிட்டோம். ஆனால் சோதனைகள் செய்து பார்த்ததில் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. மியாமி கேன்சர் இன்ஸ்டியூட்டில் எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. சிகிச்சை முடிந்து நான் ஒரு மாதத்தில் இந்தியா திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்