அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பட்டியலில் ஹென்றி கேவில்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (10:51 IST)
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களுக்கு டேனியல் கிரேய்க் முழுக்கு போட்டுவிட

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்த படத்தோடு தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க போவதில்லை என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டாக அடுத்து நடிக்கப் போவது மேட் மேக்ஸ் புகழ் டாம் ஹார்டி என சொல்லப்பட்டது. அவரைத் தவிர ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது மற்றொரு நடிகரான ஹென்றி கேவில் பெயரும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பரிசீலனையில் உள்ளது. ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு கேவில் பொருத்தமாக இருப்பார் எனக் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்