இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக திணறும் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள்!

புதன், 27 அக்டோபர் 2021 (16:32 IST)
இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடந்து வருகிறது.

டி 20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

பேட்டிங் இறங்கிய பங்களாதேஷுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிதான் காத்திருந்தது. மொயின் அலி பந்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நடையைக் கட்டினர். அதன் பின்னர் வந்த ஷகிப் அல் ஹசனும் 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரஹிம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போது இங்கிலாந்து அணி 11 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்