அஜித் பட தயாரிப்பாளரை திட்டும் தல ரசிகர்கள்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (20:17 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் அஜித்தை நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை வெளியிட்டார். இப்படம் வெற்றி பெற்றது. அதே இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை படம் தயாராகிவருகிறது.

இந்நிலையில் போனிகபூர் இன்ரு மாலை முக்கிய தகவல் வெளியிடப்போவதாகத் தெரிவித்தார். அதனால் தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள வக்கில் சாப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதனால் வலிமை குறித்து எதிர்ப்பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்