அஜித்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய அமராவதி என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. இவர் ஆசையில் ஒரு கடிதம், பூவேலி, நான் அவனில்லை உள்பட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தற்போது அரவிந்தசாமி சிம்ரன் நடித்த வணங்காமுடி என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு தற்போது டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது