துணிவு முதல் பாதி பேன்ஸ்க்கு… இரண்டாம் பாதி? – இயக்குனர் ஹெச் வினோத் தகவல்!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (15:10 IST)
அஜித்தின் துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இந்நிலையில் படம் பற்றி தற்போது பேசியுள்ள இயக்குனர் ஹெச் வினோத் “துணிவு படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இருக்கும். படத்தின் இரண்டாம் பாதி எல்லா ரசிகர்களுக்கும் ஏற்றவாறு இருக்கும். படம் பார்க்கும் அனைவரும் ஒரு கருத்தை தங்களோடு எடுத்துக்கொண்டு செல்லும் விதமாக இருக்கும்” எனக் கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்