கூத்தன் பட பார்க்க வருபவர்களுக்கு தங்கம் பரிசு

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (11:31 IST)
நீல்கிரீஸ் முருகன் தயாரிபபில் வெங்கி இயக்கியுள்ள படம் கூத்தன். இதில் நீல்கிரீஸ் முருகனின் மகன் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக கீரா, ஸ்ரீ கீதா ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத், பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜூனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில்  நடித்துள்ளனர். சினிமா கலைஞர்களின் பின்னணியைக் கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது.
 
படத்தை புரோமோட் செய்யும் விதமாக படத்தின் தயாரிப்பாளரும், ஹூரோவின் தந்தையுமான நீல்கிரீஸ் முருகன் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். கூத்தன் படம் வெளியிடப்படும் திரையரங்கில் மக்களுக்கு கூப்பன் வைக்கப்படும். மக்கள் தங்களது விவரங்களை கூப்பனில் எழுதி, படத்தை திரையில் பார்க்க வரும் போது அதை அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும்.
 
இதிலிருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பவுன் தங்க காசு பரிசாக பெறுவார். இதுபோல் மொத்தம் 18 பேருக்கு 18 பவுன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தான் எடுத்திருக்கும் இந்த புது முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்