சிரஞ்சீவி படத்தில் 8 நிமிட சண்டை காட்சிக்கு ரூ.54 கோடி செலவு

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (11:17 IST)
சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து சைரா நரசிம்ம ரெட்டி படம் தயாராகிறது.
நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். சுரேந்தர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடக்கிறது. ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இந்த படத்தை தயாரிக்கிறார் சண்டை காட்சிகளை அதிக செலவில் எடுத்துள்ளனர்.
 
படத்தில் 8 நிமிடம் இடம்பெறும் போர்க்கள யுத்த காட்சிகள் உள்ளன. இவை படத்தின் பிரதான காட்சிகளாக கருதப்படுகின்றன. இந்த 8 நிமிட போர்க்கள  காட்சியை படமாக்க ரூ.54 கோடி செலவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்