இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் 2 சீசன் நிறைவு நிகழ்ச்சியில், ஆரம்பமே கமலிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கேள்வியே ‘சார், பிக்பாஸ் 2 சீசன் முடிந்துவிட்டது. பிக்பாஸ் சீசன் 3ல் நீங்கள் பங்கெடுப்பீர்களா சார்?’என்று ஒரு நேயர் கேட்டார்.
உடனே கமல், ‘பங்கெடுக்கலாமா, வேணாமா’ என்று அந்த நேயரிடம் கேட்டார். ‘நீங்கதான் சார் பிக்பாஸ் 3 பண்ணனும்’ என்று அந்த நேயர் சொல்ல, எல்லோரும் கைத்தட்டினார்கள். அப்போது கமல், ‘அவ்ளோதானே. பண்ணிட்டாப் போச்சு’ என்றார். அவ்வளவுதான்… இன்னும் பலத்த கரவொலி எழுந்து, அடங்க நேரமாகியது.