சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி ஹெச்.வினோத்- கமல் பிறந்தநாள் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (13:24 IST)
இயக்குனர் ஹெச்.வினோத்தின் பிறந்தநாளில்  நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஹெச். வினோத். இவர்  இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்,   நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள்   ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து  இவர் கமலை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘’கமல்ஹாசன் மற்றும்  ஆர். மகேந்திரன் தயாரிப்பில்,  இயக்குனர் ஹெச்.வினோத்  எழுதி, இயக்கவுள்ள  ‘’கமல்233’’ படத்தில்  கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 152 வது படம் என்று அறிவித்தது.

இந்த நிலையில், இப்படத்தின் கதை கேட்டு, நடிகர் கமல்    இம்ப்ரஸாகியதால், அதன் திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த  நிலையில், இன்று இயக்குனர் ஹெ.வினோத்தின் பிறந்த நாளையொட்டி சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’சமூக இருள் நீங்க
திரை ஒளி பாய்ச்சும்
தம்பி #HVinoth அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்