அதன்பின்னர், மாணவன், அரங்கேற்றம், நான் அவனில்லை, மன்மத லீலை, ராஜபார்வை, காக்கிச்சட்டை, இந்தியன், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பேசும் படம் மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம், ஹேராம் உள்ளிட்ட பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு சாதித்தார் கமல்ஹாசன்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வசூலில் சாதனை படைத்தது. தற்போது அவர் இந்தியன் 2 , கமல்233 ஆகிய படங்களில் நடிப்பதுடன் சில படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.
இதுகுறித்து கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், பல ஏற்ற இறக்கங்கள், சவால்களை சந்தித்துள்ளார், அவை எதுவும் உலக நாயகனையும், சினிமாவையும் உயர்த்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நிறுத்தவில்லை…. சினிமாவை 64 ஆண்டுகளாக ஆளும் இணையற்ற பேரரசர் இன்று 64 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.