தயாராக இருங்க..! பிரபல திரையரங்க உரிமையாளரை நேரில் சந்தித்த விஜய்..!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (14:32 IST)
தென் தமிழகத்தின் நவீன திரையரங்குகளில் ஒன்றான நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கில் பிரபலங்களில் திரைப்படங்கள் வெளியானால் திருவிழாக்கோலம் போல் காட்சியளிக்கும். குறிப்பாக தளபதி விஜய் படங்கள் ரிலீஸ் என்றால் விண்ணை முட்டும் கட் அவுட்டுகள் இந்த திரையரங்கில் வைக்கப்படும்.


 
இந்த நிலையில் இந்த திரையரங்கின் உரிமையாளர் சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்தார். அவரிடம் சினிமா மற்றும் சொந்த விஷயங்கள் பலவற்றை பகிர்ந்த விஜய் தனது ஆசை ஒன்றையும் தெரிவித்தாராம்
 
நெல்லை ராம் முத்துராம் சினிமா திரையரங்கில் ஒருநாள் தான் நடித்த படத்தை ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதே தளபதி விஜய்யின் ஆசையாம்
 
இந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் இந்த திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் குதூகலத்தோடு காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்