பேட்ட ட்ரைலர் அப்டேட்ஸ்! குஷியில் ரசிகர்கள்!

வியாழன், 27 டிசம்பர் 2018 (12:25 IST)
ரஜினியின் பேட்ட ட்ரைலர் நாளை வெளியாகும்!


 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். 
 
இப்படத்தில் இடம்பெறும் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது. பேட்ட ட்ரைலர் 28-ம் தேதி வெளிவரவிருக்கிறது.
 
தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை காலை 11 மணியளவில் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

#GetRajinified tomorrow at 11am. #PettaTrailerTomorrow @Rajinikanth @karthiksubbaraj @anirudhofficial #PettaPongalParaak

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்