நடிகர் ஆகாமல் இருந்தால் இன்னும் அதிக படங்களுக்கு இசையமைத்திருக்கலாமா?.. ஜி வி பிரகாஷ் பதில்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (08:08 IST)
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி வருகிறது.  படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராகவும் இதுவரை 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் பராசக்தி திரைப்படம் அவரின் 100 ஆவது படம். அவர் நடிகர் ஆகாமல் இருந்தால் இன்னும் அதிகப் படங்களுக்கு இசையமைத்திருக்கலாம் என்ற கேள்விக்கு பதில் தெளிவான பதிலை அளித்துள்ளார்.

அதில் “நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அது ஒரு பெரிய விஷயம்தான். இதுக்கு மேல நான் பண்ணிட்டே இருந்தா நல்லா இருக்காது. போன வருஷம் கூட ‘அமரன், ‘லக்கி பாஸ்கர்’, ‘தங்கலான்’, ‘கேப்டன் மில்லர்’ என என் நான்கு ஆல்பங்கள் வந்தன.  3 மாதங்களில் ஒரு படம் எனப் பண்ணியிருக்கிறேன். அந்த இடைவெளி சரியானது என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்