உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள ஜி வி பிரகாஷின் ரிபெல்… டிரைலர் ரிலீஸ்!

vinoth
செவ்வாய், 12 மார்ச் 2024 (07:59 IST)
ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் புதிய படமான ரிபெல் மார்ச் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.  இப்படத்தை  நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.  கதாநாயகியாக பிரேமலு புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழக கேரள எல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர். டிரைலர் காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு சம முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

படம் பற்றி பேசிய படக்குழுவினர் “1980 களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளோம். படம் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்