விஜய்யின் 'மெர்சலில் இணையும் ஜி.வி.பிரகாஷ்: ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சரியம்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (05:22 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் விஜய்யின் அறிமுகப்பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



 


இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். மிகவும் எனர்ஜெட்டிக்கான இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் அபாரமாக பாடியதாகவும், அவரது பாடும் திறமையை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மா ஆச்சரியம் அடைந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் டிரைலர் ரிலீசை வரும் ஆகஸ்ட் மாதத்தில்  நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்