'AAA' இரண்டாம் பாகம் கேன்சல்? ஆதிக் அவ்வளவுதானா?

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (05:11 IST)
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்கள் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடையே வெளிவந்திருப்பதால் இரண்டாவது நாள் வசூல் படுவீழ்ச்சி அடைந்தது. இதனால் பணம் போட்ட விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




 


முதல் பாகம் படுதோல்வி அடைந்துள்ளதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் அனேகமாக ரத்து செய்யப்படலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இனியும் ஆதிக்கை நம்பி ஒரு பைசா கூட தயாரிப்பாளர் செலவு செய்ய மாட்டார் என்றே தெரிகிறது.

இந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டவே பல மாதங்கள் ஆகும் என்பதால் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பே இல்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிம்பு மற்றும் ஆதிக் ஆகிய இருவருக்குமே அடுத்த படம் ஒப்பந்தமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்