அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் புதிய வெப் சீரிஸ்!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (07:52 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை கிங்ஸ்டன் படம் மூலமாக எட்டியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர் திரைப்படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்