இயக்குநர் ஜி.என் நாகராஜன் மறைவு...கமல் அஞ்சலி

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (16:10 IST)
தமிழ் சினிமாவில் பிரபல மூத்த இயக்குநராக வலம் வந்த ஜி.என் நாகராஜன் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம், கல்யாணராமன், உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை  இயக்கியவர் ஜி.என். நாகராஜன்.  இவர் இன்று வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 90 ஆகும்.

ஜி.என்.நாகராஜன் மறைவுக்கு பிரபல நடிகர்கள், நடிகைகள் மற்றும் சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்