கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்? எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

புதன், 3 பிப்ரவரி 2021 (08:10 IST)
முகமது நபிகள் பற்றி இழிவாக பேசிய பாஜகவின் கல்யாணராமன் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சிகளும் தேர்தலில் கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் என்பவர் இஸ்லாமிய இறைதூதரான முகமதுநபி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கல்யாணசுந்தரம் மற்றும் இரு பாஜகவினரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து வன்முறையை விதைத்து அதை வைத்து வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கும் பாஜகவின் கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்