பிரபல நடிகர் ஹரி தூக்கிட்டுத் தற்கொலை..ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:42 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில்  நடித்து வந்த  நடிகர் ஹரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' என்ற சீரியல்  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் நடித்து வந்த  நடிகரும், கானா பாடகரும், பாடல் எழுதுபவரான  ஹரி இன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சீரியலில் அவர், தமிழ் என்ற கதாப்பாத்திரமாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் என்ன காரணத்திற்காக  தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்