பத்து தல படத்துக்கு வெளிநாட்டில் டப்பிங்… சிம்பு செய்யும் அலப்பறை!

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (09:22 IST)
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு ‘பத்து தல’ என்ற பெயரோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் படத்தின் டப்பிங்கை சிம்பு தவிர்த்த மற்ற நடிகர் நடிகைகள் பேசியுள்ளனர். இந்நிலையில் தற்போது பாங்காங்கில் இருக்கும் சிம்புவை டப்பிங் பேச படக்குழு தொடர்புகொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு சிம்பு “இப்போது இந்தியா வரப் போவதில்லை என்றும் டப்பிங் குழுவை இங்கு அனுப்புங்கள். இங்கேயே டப்பிங் பேசி அனுப்புகிறேன்” என சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்