சார்பட்டா பரம்பரை படத்தைப் பாராட்டிய திரௌபதி இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (11:11 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் நேற்று அமேசான் ப்ரைமில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. ரஞ்சித்தின் வருகைக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் தலி அரசியல் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர் தயரிக்கும் படங்களிலும் இது பிரதிபலிக்கிறது. இந்நிலையில் அதற்கு ஒரு எதிர்வினையாக மோகன் ஜி இயக்கிய திரௌபதி படம் வெளியானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதே நேரத்தில் தலித் மக்களின் மீதான வெறுப்பை உமிழ்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது ரஞ்சித்தின் சார்பட்டாவை பார்த்துள்ள மோகன் ஜி ‘படக்குழுவின் வியக்கவைக்கும் உழைப்பு. நான் கடவுளுக்குப் பிறகு ஆர்யாவின் மிகச்சிறந்த நடிப்பு. அனைத்து கதாபாத்திரங்களும் கவனிக்கத்தக்கவை. இயக்குனர் ரஞ்சித்தின் கடின உழைப்பு அனைவரும் அறிந்தது.’ எனக் கூறி பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்