ஆர்யா படத்துக்கு இதுவரை இல்லாத வியாபாரம்… சார்பட்டா பரம்பரை படைத்த சாதனை!

வெள்ளி, 16 ஜூலை 2021 (09:58 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இப்போது வெளியாகி படத்தின் கதாபாத்திர அறிமுகங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

எல்லா பணிகளும் முடிந்து ரிலிஸுக்கு தயாரான நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் இந்த படத்தின் ரிலிஸ் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. முன்னணி நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் ஆர்யாவின் திரை வரலாற்றிலேயே அதிக வியாபாரம் செய்யப்பட்ட படமாக இந்த படம் சாதனைப் படைத்துள்ளது. இதுவரை மொத்தமாக இந்த படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 31 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்