மாரிமுத்துவே கார் ஓட்டி வராமல் வேறு யாராவது ஓட்டி வந்திருந்தால் காப்பாற்றி இருக்க வாய்ப்பு உண்டு… மருத்துவர் தகவல்!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (07:19 IST)
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வந்த மாரிமுத்து நேற்று காலை திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். நடிகராக அறியப்படும் மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

அவரது மறைவு ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு கடைசி சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ள தகவல் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில் “மாரிமுத்து அவர்கள் நெஞ்சுவலி ஏற்பட்டதும், அவரே காரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். நெஞ்சுவலி வரும் போது வேகமாக நடப்பது, ஓடுவது மற்றும் கார் ஓட்டுவது போன்ற வேலைகளை செய்யக் கூடாது.

அதனால் உடல் அதிகம் பதட்டமாகும். அவரே காரை ஓட்டிவராமல், வேறு யாராவது ஓட்டி, அவர் அமைதியாக உட்கார்ந்து வந்திருந்தால், அவரை காப்பாற்றி இருக்க வாய்ப்பு உண்டு” என மருத்துவர் ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்