இந்நிலையில் அவர் இயக்கிய கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய படங்களில் நடித்த பிரசன்னா வெளியிட்டுள்ள இரங்கலில் “அவர் மறைவு செய்தியைக் கேட்டு உறைந்துவிட்டேன். நாங்கள் இருவரும் சகோதரர்களாக பழகினோம். அவர் வாழக்கை சுலபமானதாக இருக்கவில்லை. ஒரு நடிகராக அவர் இப்போது முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் இன்னும் பல ஆண்டுகாலம் வாழ்ந்திருக்க வேண்டும்…. போய்ட்டு வாப்பு” என தெரிவித்துள்ளார்.