திருமணம் முடிந்த 10 நாட்களுக்குள் ஹன்சிகா குடும்பத்தில் நடக்கும் விவாகரத்து!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (09:39 IST)
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் நடிகையானவர் ஹன்சிகா. இவர் குஷ்பு போல பூசினார் போல இருந்ததால் அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. 

இதனால் ஒல்லியான தோற்றத்திற்கு மாறி வாய்ப்புகள் கிடைக்குமா என எதிர்பார்த்தார். ஆனால் கிடைத்த பாடில்லை. இதனால் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆவதற்குள்ளாகவே அவரது குடும்பத்தில் ஒரு விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானி, தன்னுடைய மனைவி நான்சியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்