தமிழ் சினிமாவில் தன்னுடைய தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி கடைசியாக கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் ஓடிடியில் கவனம் பெற்றது.
தற்போது தன்னுடைய இடிமுழக்கம் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது சம்மந்தமான அவரது முகநூல் பதிவில் “அறிவிப்பு அன்பானவர்களுக்கு வணக்கம் , நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.” எனக் கூறியுள்ளார்.