இங்க இருந்து ஒரு பய வெளியே போக கூடாது: சியான் விக்ரம் ‘வீர தீர சூரன்’ டீசர்..!

Mahendran

திங்கள், 9 டிசம்பர் 2024 (18:17 IST)
சியான் விக்ரம் நடித்த வீர தீர சூரன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் சுமார் இரண்டு நிமிட டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள், விக்ரம் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் ஆவேசமான காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.

இந்த டீசரின் வெளியீட்டை தொடர்ந்து, படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை கவரும் வகையில் இந்த டீசர் அமைந்துள்ளது.

இதனால், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்