பிரிந்தது ராம்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி… பறந்து போ படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர்!

vinoth
செவ்வாய், 21 ஜனவரி 2025 (07:15 IST)
இயக்குனர் ராம் நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. மார்ச் மாதம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.

படத்துக்கு ‘பறந்து போ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டு இந்த படமும் ‘ரோட்டர்டாம் சர்வதேச் திரைப்பட விழா’வில் திரையிடத்  தேர்வாகியுள்ளது. வழக்கமாக ராமின் அனைத்துப் படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பார். ஆனால் இந்த படத்துகு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்