இயக்குனர் ராம் நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.