ஹோட்டலில் தெய்வதரிசனம்… இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்த இயக்குனர் நவீன்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (15:42 IST)
இயக்குனர் நவீன் படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி இருந்த போது அங்கு எதேட்சையாக இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாக்களின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இதையொட்டு பெரும்பாலான தமிழ் சினிமா கலைஞர்கள் அங்கே முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் நவீன் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கி இருந்த போது எதிர்பாராத விதமாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ‘ஒரு மாசமா ஹைதராபாத் ட்ரைடண்ட் ஹோட்ட்ல்லதான் இருக்கேன். தமிழ் சினிமாவே இங்கதான் இருக்கு. அத்தன தெரிஞ்ச முகங்கள். ஆனால் இன்னிக்கு காலைல சாப்ட்டு லாபி வழியா வந்தா தெய்வதரிசனம். பாரதிராஜா அய்யாகிட்ட அக்னிசிறகுகள் க்ளைமேக்ஸ் காட்டினேன். மிரட்சி என்றார். இந்த நாள் இனிய நாளே!’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்