விதார்த் நடிக்கும் புதிய படம்… 6 ஆண்டுகளுக்கு பின் வரும் இயக்குனர்!

திங்கள், 19 ஜூலை 2021 (11:54 IST)
நடிகர் விதார்த் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

நடிகர் விதார்த், கருணாஸ், லஷ்மி பிரியா ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை 2015 ஆம் ஆண்டு உறுமீன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சக்திவேல் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்