வடக்கன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று வாழ்த்திய இயக்குனர் பாரதிராஜா!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:03 IST)
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. வடக்கன் என்று பெயரிடப்பட்டுள்ள் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை இயக்குனர் சுசீந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் படக்குழுவினரை வாழ்த்தும் பொருட்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா வடக்கன் படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கே சென்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் வேடியப்பன் வெளியிட்டுள்ள பதிவில் “இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் Vadakkan - வடக்கன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, இயக்குநர் Bhaskar Sakthi, ஒளிப்பதிவாளர் Theni Eswar , மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் என்னையும் என மூவரையும் ஆசிர்வதித்தார்... நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்புத் தளத்திற்கு திரும்பியதால் மிகுந்த உற்சாகமாக இருந்தார்.  ஒரு காட்சியை இயக்கினார். வயதை, உடல் நிலையை மறந்து எங்களோடு நீண்டநேரம் பேசித் சிரித்து மகிழ்ந்தார். ஒன்றாக  உடனமர்ந்து உணவருந்தினார். தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதிய பிதாமகரின் வருகை வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக மனதில் பதிவாகிவிட்டது.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்