இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகள் இருக்குமா? லேட்டஸ்ட் தகவல்!

செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (15:56 IST)
2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமா இழந்த கலைஞர்களில் நடிகர் விவேக்கும் ஒருவர். எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அவர் நடித்துக்கொண்டிருந்த சில படங்கள் இப்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. அதில் ஒரு படம்தான் இந்தியன் 2. கமல்ஹாசன் மற்றும் விவேக் இணைந்து நடிக்கும் முதல் படமாக உருவான இந்த படத்தில் விவேக் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவற்றை நடித்து முடித்துள்ளாராம். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு அவருக்கு பதில் குரு சோமசுந்தரத்தை வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது விவேக் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படாது எனவும், அவரது காட்சிகளுக்கு மற்றொரு நடிகரை வைத்து டப்பிங் பேசி படத்தில் இடம்பெற செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்