காத்திருக்கும் அசுரன் படக்குழு – லண்டனில் டப்பிங் பேசும் தனுஷ் !

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:27 IST)
அசுரன் படத்திற்காக தனுஷ் லண்டனில் டப்பிங் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடசென்னை படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள அசுரன் படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா,  பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். சாகித்ய அகாதேமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. பரபரப்பாக எல்லா வேலைகளும் முடிந்துள்ள நிலையில் இப்போது தனுஷ் டப்பிங் பேசுவதற்காக படக்குழு காத்திருக்கிறது. ஆனால் தனுஷோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்துக்காக லண்டனில் முகாமிட்டுள்ளார். அதனால் டப்பிங் பணிகளை லண்டனிலேயே மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்