தனுஷின் ‘வாத்தி’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (17:24 IST)
தனுஷின் ‘வாத்தி’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தனுஷ் நடித்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
 
தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
 
மேலும் இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்