ஹாரிபாட்டர் அணிந்த கண்ணாடிகள் ஏலம்! – விலை எவ்வளவு தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (15:51 IST)
உலக புகழ்பெற்ற ஹாரிபாட்டர் கதாப்பாத்திரம் அணிந்த கண் கண்ணாடிகள் ஏலத்தில் விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜே.கே.ரொவ்லிங் எழுதி 1997ல் புத்தகமாக வெளியான கதை ஹாரி பாட்டர். மொத்தம் 7 பாகங்களாக வெளியான இந்த கதை 8 பாக ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகி உலகெங்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது.

இந்த படத்தில் ஹாரிபாட்டராக டேனியல் ராட்க்ளிப் நடித்திருந்தார். இந்த ஆண்டுடன் ஹாரிபாட்டர் கதையின் முதல் புத்தகமான ‘ரசவாதியின் கல்’ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை உலகம் முழுவதுமுள்ள ஹாரி பாட்டர் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஹாரிபாட்டர் படத்தின் டேனியல் ராட்க்ளிப் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகளை ஏலத்தில் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக 52 கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கண்ணாடிகள் 20 ஆயிரம் ப்ரிட்டிஷ் பவுண்டுகள் அல்லது 22 ஆயிரம் டாலர்கள் வரை ஏலத்தில் போக வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த ஏலம் நவம்பர் 11ம் தேதி இங்கிலாந்தில் நடக்க உள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்