பொன்னியின் செல்வனின் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுக்கும் பிரபல நடிகை!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:56 IST)
நடிகை தீபா வெங்கட் பல படங்களில் பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு  முன்னர் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்த படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அவருக்கு பின்னணி குரல் கொடுக்க தமிழில் நடிகையுமான பின்னணிக் குரல் கலைஞருமான தீபா வெங்கட் ஒப்பந்தமாகியுள்ளார். இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் நயன்தாராவுக்கு தொடர்ச்சியாக பல படங்களில் டப்பிங் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்