ஷங்கர் - ராம்சரண் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர் !

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:54 IST)
தில்ராஜு தயாரிப்பில்,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்  நடிப்பில் உருவாகி வரும் RC-15 படத்தில் பிரபல தமிழ் நடிகர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரண் –கியாரா அத்வானி , அஞ்சலி நடிப்பில் ஆர்.சி15 படத்தை இயக்கி வருகிறார்.

.இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேசன்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா   ந்டிக்கும் படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில், இப்படமும் வெற்றி பெரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்