பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா கூல் சுரேஷ்? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (14:16 IST)
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ன் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த மாதம் முதல் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்கள் என பலரின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானவர்களாக நடிகர் அப்பாஸ், பிருத்விராஜ், கிரண், வைரல் ஆன டிரைவர் ஷர்மிளா, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்