குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரீமியர் தேதி இதுதான்… வெளியான அறிவிப்பு!

vinoth
திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:32 IST)
விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில் வெங்கடேஷ் பட் விலக, அவருக்குப் பதில் நடிகரும், சமையற் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக இணைந்துள்ளார்.

குவைத் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களாக நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி,  விடிவி கணேஷ் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது குக் வித் கோமாளி ஒளிபரப்புத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்