ஹிரோவாக CWC புகழின் முதல் படம் மிஸ்டர் ஸூ கீப்பர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

புதன், 3 ஏப்ரல் 2024 (07:21 IST)
விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் புகழ். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்  ‘மிஸ்டர் ஸூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் புகழ் “நீண்ட நாள் காத்திருப்பு... மே 3ம் தேதி Mr.zoo keeper திரைப்படம் வெளிவர உள்ளது. முதன்முறையாக திரையில் கதையின் நாயகனாக தோன்ற உள்ளேன்.... என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் நன்றி..” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்