Mr Zoo Keeper... ஹீரோவானார் CWC புகழ்!!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (11:05 IST)
காமெடியனாக சில படங்களில் நடித்த புகழ் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 
விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். 
 
அதோடு இந்த படத்தில் ஒரிஜினல் புலியுடன் நடிக்க இருப்பதாகவும் இதற்காக பயிற்சி எடுத்துக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திரைப்படத்தை ஜெ.சுரேஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்று குறிப்பிட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்