நடராஜன் வீட்டுக்கு சென்று சந்தித்த குக் வித் கோமாளி பிரபலம்! செம்ம விருந்து

புதன், 9 மார்ச் 2022 (09:39 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீட்டுக்கு குக் வித் கோமாளி புகழ் சென்று விருந்து சாப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதையடுத்து மீண்டும் அணியில் விளையாட விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடராஜனின் வீட்டுக்கு அவரின் அழைப்பின் பேரில் சென்றுள்ள குக் வித் கோமாளி பிரபலம் புகழ், அங்கு நடராஜன் வைத்த கறிவிருந்து புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் இருவரும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள நடராஜன் ‘புகழ் அண்ணன் கூட இருக்கும்போது நான் எப்போதும் டல்லாக உணர்ந்ததில்லை’ என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்