சந்தானம், சூரி, யோகிபாபு வரிசையில் இப்போது புகழ்… வெளியான அப்டேட்!

திங்கள், 21 மார்ச் 2022 (10:46 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்டார்களில் ஒருவரான புகழ் இப்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 செம்ம ஹிட் அடிக்க அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த புகழும் முக்கியக் காரணம். அந்த சீசனின் ஹிட்டுக்குப் பிறகு இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இதுவரை நகைச்சுவை வேடத்தில் நடித்துவந்த புகழ் இப்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

என்னவளே படத்தின் இயக்குனர் சுரேஷ் இயக்கும் மிஸ்டர் ஸூ கீப்பர் (Mr Zoo keeper) எனும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குக் வித் கோமாளி சீசன் 3 ல் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்