அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடிய குக் வித் கோமாளி பிரபலம்!

வியாழன், 17 மார்ச் 2022 (09:38 IST)
அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடிய குக் வித் கோமாளி பிரபலம்!
விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடினார்கள் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் அரபிக்குத்து பாடலுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்து வரும் செப் தாமு நடனமாடியுள்ளார். இந்த நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் நடுவராக இருந்து வரும் செப் தாமு ஏற்கனவே பல்வேறு சமையல் வீடியோவை யூடியூபில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்